மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

6 சவரன் நகைக்கடன்: பட்டியலைக் கேட்கும் தமிழக அரசு!

6 சவரன் நகைக்கடன்:  பட்டியலைக் கேட்கும் தமிழக அரசு!

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நகைக்கடன் நிலுவை பட்டியலை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுள்ளது.

நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், பயிர்க்கடன் தள்ளுபடி, 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது நகைக்கடன் நிலுவைத் தொகை தொடர்பான விவரங்களை அனுப்புமாறு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “ஜனவரி 31 வரையிலான நகைக்கடன் விவரங்களை அனுப்ப வேண்டும்.

தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும்; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களைச் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் உரிய படிவத்தில் பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 3 மா 2021