மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

கொரோனா பரவல் - விரைவாக முடிவுக்கு வர சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பரவல் - விரைவாக முடிவுக்கு வர சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு!

ஏழு வாரங்களுக்குப் பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், “உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பது முதிர்ச்சியற்ற சிந்தனை. அதற்குச் சாத்தியமில்லை” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.50 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை, 25.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 9 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக அளவில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தத் தடுப்பூசியின் வருகையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனை முதிர்ச்சியற்றது, இயல்புக்கு மாறானது.

கொரோனா தடுப்பூசியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் தடுக்கப்படும், குறைக்கப்படுமே தவிர, கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடாது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், கொரோனா உயிரிழப்பையும் வேண்டுமானால் முடிவுக்குக் கொண்டு வரலாம். இப்போது புள்ளிவிவரங்கள்படி, கொரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்திக்கொண்டு சென்றால், நாம் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால், இப்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மிகுந்த கட்டுக்குள் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறுகையில், “பல வளர்ந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல், இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயம்.

உலகத்தின் பணக்கார நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகியவை தங்களின் மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியை போடத் தொடங்கிவிட்டன. ஆனால், ஏழ்மை நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட் போன்றவற்றுக்கு இந்த வாரத்தில்தான் தடுப்பூசி போடுவதே தொடங்கப்படுகிறது. உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் போட்டி போட்டுவிடக் கூடாது. இது கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் அனைவரும் நடத்தும் பொதுவான போட்டி. உங்கள் நாட்டின் மக்களை இடர்ப்பாடுகளில் சிக்கவையுங்கள் என நாங்கள் கூறவில்லை. உலகத்தின் முயற்சிக்குத் துணையாக இருந்து உலகெங்கும் கொரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவரத் துணைபுரியுங்கள் என்றுதான் கூறுகிறோம். கடந்த ஏழு வாரங்களுக்குப் பின் கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரம் முதன்முறையாக அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது, அதிர்ச்சியாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 3 மா 2021