மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

இன்றும், நாளையும் எட்டு மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்!

இன்றும், நாளையும் எட்டு மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 4ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். குறிப்பாக மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி, குறைந்தசபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 2 மா 2021