மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

கொரோனா தடுப்பூசி பதிவு: ‘கோவின்’ செயலியில் சிக்கல்!

கொரோனா தடுப்பூசி பதிவு: ‘கோவின்’ செயலியில் சிக்கல்!

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோவின் செயலி (ஸ்மார்ட்போன் ஆப்) மூலம் பதிவு செய்ய முடியாமல் பலர் சிரமப்பட்ட நிலையில், கோவின் செயலியில் பயனர்கள் நேரடியாகப் பதிவு செய்ய முடியாது என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று (மார்ச் 1) இரண்டாம்கட்ட கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கோவின் செயலி (ஆப்) மற்றும் இணையதளம் (நெட்) மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கோவின் செயலியைப் பொதுமக்கள் டவுன்லோடு செய்து அதன்மூலம் முன்பதிவு செய்ய முடியவில்லை. செல்போன் எண்ணை பதிவு செய்தால், அதற்கு ஓடிபி வரவில்லை என பலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த

போது கோவின் ஆப் லாக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர், கோவின் இணையதளம் (http://cowin.gov.in) மூலமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் கோவின் செயலி (ஆப்) மூலம் பயனர்கள் பதிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது.

மேலும், பிளே ஸ்டோரில் உள்ள கோவின் செயலியை இப்போது கோவின் நிர்வாகிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 2 மா 2021