மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு: தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை!

ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு:  தாமாக முன்வந்து நீதிமன்றம்  விசாரணை!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது முதல்வர் பாதுகாப்புப் பணிக்குச் சென்று திரும்பிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஷ் பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 354, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் மீது அடிப்படை முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மின்னம்பலத்தில் டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது. காவல் துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

-பிரியா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 1 மா 2021