ரிலாக்ஸ் டைம்: சீஸ் அவல்!

விடுமுறை முடிந்து அடுத்த நாள் அலுவலகத்துக்குச் செல்பவர்களில் பலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சீஸ் அவல் செய்து வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாம். நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்
எப்படிச் செய்வது?
கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடாக்கி, 200 கிராம் அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து, 50 கிராம் சீஸை துருவிக் கலந்து பரிமாறவும்.
சிறப்பு