மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

கிச்சன் கீர்த்தனா: இறால் எக் ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: இறால் எக் ரைஸ்

அசைவ உணவுகளில் அத்தனை வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல... சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எடை குறைப்பதில் மட்டுமல்ல... சருமப் பொலிவுக்கும் இறால் உதவுகிறது. இன்று இறாலுடன் முட்டை சேர்த்து இறால் எக் ரைஸ் செய்து கொண்டாடுங்கள்.

என்ன தேவை?

இறால் - கால் கிலோ (சுத்தம் செய்தது)

முட்டை - 3

வடித்த சாதம்/பாசுமதி சாதம் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - 2

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, மல்லித்தழை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறிவைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடங்கள் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும். இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும். பிறகு, இறக்கி வேகவைத்து ஆற வைத்த சாதத்துடன் கலந்து மல்லித்தழை தூவிப் பரிமாறவும். தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு

பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஆறவைத்திருந்து இறால் எக் ரைஸ் தயாரித்தால் சுவையாக இருக்கும்.

நேற்றைய ஸ்பெஷல்: சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

திங்கள் 1 மா 2021