மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

குழந்தைகளுடன் ஒரே பைக்கில் 6 பேர் பயணம்: விபத்தில் 5 பேர் பலி!

குழந்தைகளுடன் ஒரே பைக்கில் 6 பேர் பயணம்: விபத்தில் 5 பேர் பலி!

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆறு பேரில் 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர், தனது குழந்தைகள் செந்நிலவன்(3), தமிழ்நிலா (2), உறவினரின் குழந்தை நந்திதா (2), அம்மா தனம், சகோதரர் சக்திவேல் ஆகியோருடன் ஒரே பைக்கில் விசேஷ நிகழ்வு ஒன்றுக்குச் சென்று திரும்பி கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளப்பாடி பகுதியிலிருந்து வேப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, கள்ளங்காடு என்ற இடத்தில் இவர்களது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பரமேஸ்வரி குழந்தைகள் செந்நிலவன் மற்றும் நந்திதா ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் கூட்டம் திரண்டிருக்கிறது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களான தனம் சக்திவேல் மற்றும் மற்றொரு குழந்தை தமிழ் நிலா ஆகிய 3 பேரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் தனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சக்திவேல் மற்றும் தமிழ்நிலா இருவரையும் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை தமிழ் நிலா மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த சரவணன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சென்று விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தது பெரம்பலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 28 பிப் 2021