மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

நள்ளிரவு... நடுக்காடு...: ஆம்புலன்சில் பிறந்த குழந்தை!

நள்ளிரவு... நடுக்காடு...: ஆம்புலன்சில் பிறந்த குழந்தை!

சத்தியமங்கலத்தில் நடுக்காட்டில் ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் செங்காட்டையைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, சடையம்மாள். நேற்றிரவு நிறைமாதமான சடையம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலமாக சடையம்மாளை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் ராமன் ஆகியோர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில், சடையம்மாளுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸூக்கு பின்னால், சடையம்மாளின் கணவர், மாமியார் உட்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அடர்த்தி மிகுந்த காட்டுப்பகுதி மற்றும் குறுகலாக இருக்கும் போன்பாறை என்ற இடத்தில் காட்டெருமை வழிமறித்து நின்றது.

அப்போது காட்டெருமை திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தாக்க முயன்றபோது, உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் ஒலி எழுப்பி காட்டெருமையை விரட்டினார். இதனால் ஒருமணி நேரமாக சாலையை கடக்கமுடியாமல் அடர்ந்த காட்டில் அதே இடத்தில் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றது.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 28 பிப் 2021