மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

2020: ரயில் விபத்து மரணங்கள் குறைவு!

2020:  ரயில் விபத்து மரணங்கள் குறைவு!

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டில் ரயில் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 57 சதவிகிதம் குறைந்துள்ளது என ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக ரயில்வே காவல் துறை கூறுகையில்,. கடந்த 2018ஆம் ஆண்டு 2,502 விபத்துக்களும் 2019ஆம் ஆண்டு 2,600 விபத்துக்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு 1,129 ரயில் விபத்துக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இருப்புப்பாதை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முயற்சியின் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ரயில் விபத்தால் ஏற்படும் மரணங்கள் 57% குறைந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் ரயில் விபத்தால் 2,517 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,173 பேர் ஆண்கள். 344 பேர் பெண்கள். 2020 ஆம் ஆண்டில் 1,137 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 14,845 இடங்களில் ரயில்வே போலீசாரால் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்யப்பட்டன.

ரயில்வே போலீசார் மேற்கொண்ட விபத்துத் தடுப்பு முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளதால் இந்த நடவடிக்கைகள் வரும் மாதங்களிலும் தொடர்வது மட்டுமல்லாமல், அதிகப்படுத்தவும் முயற்சி எடுக்கப்படும்.

குற்ற நடவடிக்கை தொடர்பான தகவலை தெரிவிக்க ரயில்வே காவல் உதவி மைய எண் 1512 மற்றும் செல்போன் எண் 9962500500 அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வண்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள் குறித்து 'காவலன்' மற்றும் 'தீ' செயலி மூலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஞாயிறு 28 பிப் 2021