மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

ஏடிஎம்-ஐ தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

ஏடிஎம்-ஐ தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

திருப்பூரில் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் பெயர்த்தெடுத்து, வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் கூலிபாளையம் நான்குமுனை சந்திப்பில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி உள்ளது. இன்று காலை இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் வந்து பார்வையிட்ட போது, ஏடிஎம் கதவை உடைத்து, கொள்ளையர்கள் இயந்திரத்தைத் திருடி சென்றது தெரியவந்தது.

அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மூகமுடி அணிந்த 4 கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், இயந்திரத்தை பெயர்த்தெடுத்து வாகனத்தில் கயிற்றைக் கட்டி வாசல் வரை கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதனால், ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் மற்றும் வாசல் சேதமடைந்துள்ளது.

கொள்ளையர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டு விட்டு ஏடிஎம் இயந்திரத்தை மற்றொரு வண்டியில் எடுத்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.15 லட்சம் இருந்ததாகவும், நேற்றைய தினம் வரை எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை இருந்திருக்கலாம் என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடமாக இந்த வங்கிக்கு இரவு நேர காவலர்கள் நியமிக்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

ஞாயிறு 28 பிப் 2021