மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்!  

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்!  

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை வலியுறுத்திப் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை, இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்பிசி- வி பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம், சீர் மரபினருக்கு 7 சதவிகிதம், எஞ்சியுள்ளவர்களுக்கு 2.5 சதவிகிதம் என உள் ஒதுக்கீடு பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியாகாத நிலையில் இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.  சீர்மரபினருக்கு 7 சதவிகிதம் மற்றும், எஞ்சியுள்ளவர்களுக்கான 2.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 28 பிப் 2021