மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-51

19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-51

19 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக்கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட ‘கவுன்ட் டவுன்’ நேற்று (பிப்ரவரி 27) காலை 8:54 மணிக்குத் தொடங்கியது. பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவற்றைக் கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் ‘அமேசோனியா – 1’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அமேசோனியா-1 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 637 கிமீ தொலைவில் அதன் புவிவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஹெச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய ஐந்து செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று (பிப்ரவரி 27) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், ராக்கெட்டின் மாதிரி வடிவம், ஆவணங்கள், வரைபடம் ஆகியவற்றை மூலவர் பாதத்தில் வைத்து வழிபட்டார்.

கோயிலில் இருந்து வெளியே வந்ததும், இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறுகையில், “இஸ்ரோ தலைவராக இருப்பது பாக்கியம். மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதேபோல் இந்த ஆண்டு பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

2021ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முதலில் செலுத்தப்பட்ட ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 28 பிப் 2021