மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: கீரை மஷ்ரூம் பீட்சா டோஸ்ட்!

ரிலாக்ஸ் டைம்: கீரை மஷ்ரூம் பீட்சா டோஸ்ட்!

கீரையை வழக்கமான முறையில் செய்து பரிமாறும்போது, சிறியவர்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் பேருக்குக் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோ, சாப்பிடாமலோ ‘எஸ்கேப்’ ஆகிவிடுவார்கள். இவர்களை கீரை சாப்பிடவைக்க சண்டே ஸ்பெஷலாக ரிலாக்ஸ் டைமில் இந்த கீரை மஷ்ரூம் பீட்சா டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கட்டு பாலக்கீரையைச் சுத்தம் செய்து நறுக்கவும். 100 கிராம் மஷ்ரூமை இரண்டாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கீரை, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, மஷ்ரூம் சேர்த்து வேகும் வரை வதக்கிக்கொள்ளவும். தோசைக்கல்லை மிதமான சூட்டுக்குக் காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, அதன் மீது தேவையான அளவு பீட்சா சாஸ் தடவவும். பின்னர் அதன் மேல் கீரை, மஷ்ரூம், சிறிதளவு துருவிய சீஸ் வைத்து, மூடி போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து சீஸ் இளகும் வரையில் டோஸ்ட் செய்யவும். சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 28 பிப் 2021