மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

கொரோனா தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளில் ரூ.250

கொரோனா தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளில் ரூ.250

கொரோனா தடுப்பு மருந்துகள் தனியார் மருத்துவமனையில் ரூ.250க்குக் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று காலை வரையில் 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 77 சதவிகிதம் பேர் முதல் டோஸும், 70 சதவிகிதம் பேர் இரண்டாம் டோஸும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது கோவின் செயலியை கோவின் 2 என அரசு மேம்படுத்தியுள்ளது. ஆதார் அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டைகளான வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றை கொண்டு இந்தச் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த நிலையில் நாடு முழுவதும் 761 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 529 அரசு மருத்துவமனைகள் தடுப்பூசியைப் போடுவதற்கு ஆர்வமாக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.250க்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேவை கட்டணம் ரூ.100 அடங்கும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை 23.77 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், கோவிஷீல்ட் 21 லட்சம் டோஸ் மற்றும் கோவாக்சின் 2.77 லட்சம் டோஸ் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 28 பிப் 2021