மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

“ஒவ்வொரு சண்டேயும் சூப்பரா மீன்குழம்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், மீன்குழம்பு வைக்கும்போது நீர்த்துப்போய் விடுகிறது. எந்த தூள் போட்டாலும், அப்படித்தான் இருக்கிறது. சுவையான மீன்குழம்பு தயாரிப்பது எப்படி?” என்பது பல இல்லத்தரசிகளின் சந்தேகம்... அதற்கான தீர்வு இதோ..

மீன்குழம்பு நீர்த்துப்போக முக்கிய காரணம், சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் மீன்கள் ஃப்ரெஷ்ஷாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும் மீன்களை வாங்கிச் சமைத்தால், மீன் துண்டுகளைக் குழம்பில் சேர்த்ததும் நீர்த்துப் போகும் வாய்ப்புகள் அதிகம்.

சரியான அளவில் தண்ணீர் சேர்த்துக் குழம்பைக் கூட்டி வைத்து, கொதி வரும்போது மீன் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். குழம்பு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டால், மீன்குழம்பு சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

சங்கரா மீன் - 500 கிராம் (அரை கிலோ), பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, பூண்டுப் பற்கள் - 9, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், வடகம் - சிறிது, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சைப்பழ அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி இவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குழம்பாகக் கூட்டிவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு அதில் வடகம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலைக் கலவையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் நாம் கூட்டி வைத்திருக்கும் குழம்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒன்றிரண்டு குமிழ்கள் வரும்போது நறுக்கி, சுத்தமாகக் கழுவிவைத்திருக்கும் மீன் துண்டுகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் மூடி போட்டு குழம்பை இறக்கி விடவும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 28 பிப் 2021