மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: மசாலா கார்ன் சாலட்!

ரிலாக்ஸ் டைம்: மசாலா கார்ன் சாலட்!

ஷாப்பிங் செல்லும் விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது, டிபார்ட்மென்டல் கடைகளுக்கு வெளியில் விற்கப்படும் சாட் அயிட்டம் கார்ன் மசாலா சாலட். ரிலாக்ஸ் டைமில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்குப் பதிலாக இதை வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் ஸ்வீ ட் கார்னை வேகவைத்து கொள்ளவும். சிறிதளவு மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெயை உருக்கி அதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றி மிளகுத்தூள் கால் டீஸ்பூன், பிளாக் சால்ட் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன், சீரகத்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து கடைசியில்

எலுமிச்சைச்சாறு இரண்டு டீஸ்பூன் பிழிந்து கலந்து பரிமாறவும்.

விருப்பமிருந்தால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

சிறப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 27 பிப் 2021