மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

பட்டாசு விபத்து குறித்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு!

பட்டாசு விபத்து குறித்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு!

சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் பேரில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில், கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இதுதொடர்பாக விசாரணை செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய அரசு முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு இன்று அச்சன்குளம் பட்டாசு ஆலையை ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டாசு வெடி விபத்துக்கான காரணங்கள், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள், விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுகள் முடிந்த பிறகு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 26 பிப் 2021