மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

கின்னஸ் சாதனைக்கு பொங்கல்வைத்த கொரனோ!

கின்னஸ் சாதனைக்கு பொங்கல்வைத்த கொரனோ!

தமிழ் பத்தினி பெண்தெய்வம் கண்ணகிக்கு கேரளாவில் ஆற்றுக்கால் மற்றும் கொடுங்காளூரில் பிரபலமான பகவதி கோயில் உள்ளது.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோயிலில் மாசி மாதம் பௌர்ணமி திதியில் பூரம் நாளில் பல லட்சம் பெண்கள் பொங்கலிடும் நிகழ்வு நடைபெறும்.

கேரளாவில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிப்ரவரி 27இல் சனிக்கிழமை புனித ஆற்றுக்கால் பொங்கலாவை சரித்திரத்தில் முதல் முறையாக வீட்டில் பொங்கலிட்டு கொண்டாடுகிறார்கள். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்த முறை கொரோனா நெறிமுறையின்படி கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தாங்களாகவே வீடுகளில் பொங்கலா சடங்கைச் செய்வார்கள்.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் முக்கிய பாரம்பரிய அடுப்பில் மட்டுமே கோயில் மேல்சாந்தி பொங்கலா இட அனுமதி வழங்கப்படும்.

கோயிலின் தந்திரி சனிக்கிழமை காலை 10.50 மணிக்கு அடுப்பை ஒளிரச் செய்வதற்காக கருவறையிலிருந்து பிரதான தீபம் எடுத்துவந்து மேல்சாந்தியிடம் ஒப்படைப்பார். பொங்கலா சடங்கிற்குப் பிறகு நிவேத்யம் மற்றும் பிரசாதம் பிற்பகலில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பொது இடங்களில் அல்லது சாலைகளில் 'பொங்கலா' (இனிப்பு பிரசாதம்) வழங்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பொங்கல் பிரசாதம் செய்யலாம். கொரோனா நெறிமுறையின்படி பக்தர்கள் ஆற்றுக்கால் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

'பொங்கலா' விழா ஆற்றுக்கால் பகவதி கோயிலின் ஆண்டு விழாவின் ஒரு நல்ல சடங்காக கருதப்படுகிறது. பல லட்சம் பெண்கள் மாசி பௌர்ணமி பூரம் நாளில் பொங்கலிடும் இந்த வைபோகம் மிக முக்கியமான பக்தியின் வெளிப்பாடு.கடந்த 1997இல் நடந்த பொங்கலா விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு கின்னஸ் ரெக்கார்டு சாதனையாக அறிவிக்கப்பட்டது.

2004-இல் 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த 2018-ம் ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு அனந்தபுரி மாநகரெங்கும் பொங்கலிட்ட இந்த மாபெரும் வைபோகம்

இந்த ஆண்டு கொரோனாவால் ஒரு சம்பிரதாய சடங்காகவே மாறிப்போய் வீட்டுக்குள் பொங்கலிடும் நிகழ்வாகிப் போனது.ஆனால் பொங்கல் நடைபெறும். பிப் 27இல் மற்ற சம்பிரதாய சடங்குகள் விதிமுறைகள் பின்பற்றி நடைபெறும் .

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 26 பிப் 2021