மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்!

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்!

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் மருத்துவர் சமூகத்துக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் வழங்கக் கோரி இன்று (பிப்ரவரி 26) தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மருத்துவர் சமூகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இச்சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 30 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடந்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், மிகவும் பிற்பட்டோர் பிரிவில் இருக்கும் மருத்துவர் சமூகத்துக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 5% உள்ஒதுக்கீடும், சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 3 லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 26 பிப் 2021