மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

ஸ்டிரைக்: பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்!

ஸ்டிரைக்: பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்!

இரண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் ரூ.1,000 தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அளவுக்கு இல்லை.அதனால், அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை போராட்டம் தொடரும் எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இன்று (பிப்ரவரி 26) காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் அந்தந்த பணிமனைகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அதிமுக ஆதரவு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்கூட பேருந்துகளை இயக்குவதற்கு அரசுக்குத் துணையாக இல்லை. அவர்களும் மறைமுகமாக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதான் தொழிலாளர் ஒற்றுமை என்று கூறுகின்றனர்.

மேலும், பேருந்துக்கு ஒரு போலீஸ் நியமித்து, அவர்கள் மூலம் கார், வேன், லாரி ஓட்டுபவர்களை கொண்டு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி செய்தால், அது விபரீதத்தில்தான் முடியும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 26 பிப் 2021