மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

44ஆவது புத்தகக்காட்சி: தொடக்க விழாவில் துணை முதல்வர்!

44ஆவது புத்தகக்காட்சி: தொடக்க விழாவில் துணை முதல்வர்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் 44ஆவது புத்தகக்காட்சியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 24) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்தப் புத்தகக்காட்சிக்கு நிதி உதவியாக தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாயும், துணை முதலமைச்சர் சார்பில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 9ஆம் வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் காட்சியில் சுமார் 800 அரங்குகளில் 15 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 30 லட்சம் பார்வையாளர்கள், 20 லட்சம் வாசகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இந்தப் புத்தகக்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

“வரும் 28ஆம் தேதி அன்று உலக அறிவியல் தினத்தையொட்டியும், மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினத்தையொட்டியும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. புத்தகக்காட்சி தொடங்குவதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளி அரங்கில் புத்தக வெளியீடுகள், சிறந்த புத்தகங்களின் அறிமுகம், விமர்சனம் ஆகியவை நடைபெறும்.

கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவிகிதத் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவிகிதம் வரையில் தள்ளுபடி வழங்குவார்கள். கடந்த ஆண்டு ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. இந்த ஆண்டும் அந்த இலக்கை எட்டுவோம் என்று நம்புகிறோம்” என பபாசி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 25 பிப் 2021