மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

டெல்லிக்குள் நுழைய ஐந்து மாநில மக்களுக்குக் கட்டுப்பாடு!

டெல்லிக்குள் நுழைய ஐந்து மாநில மக்களுக்குக் கட்டுப்பாடு!

மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாகவே கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

முககவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றியதால் கொரோனா பரவல் குறையத்தொடங்கியது. பிறகு அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் மறந்தனர்

இதன்காரணமாக தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா தற்போது வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் டெல்லிக்குள் நுழைய ஐந்து மாநில மக்களுக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில மக்கள் டெல்லிக்குள் நுழைய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்த சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சான்றிதழ் இல்லாமல் வரும் இந்த ஐந்து மாநில மக்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு நாளை (பிப்ரவரி 26) முதல் மார்ச் 15ஆம் தேதி வரை தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு இந்தக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வியாழன் 25 பிப் 2021