மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

விண்ணில் செல்லும் பிஎஸ்எல்வி சி-51: சென்னை மாநகராட்சிக்கு இஸ்ரோ கடிதம்!

விண்ணில் செல்லும் பிஎஸ்எல்வி சி-51:  சென்னை மாநகராட்சிக்கு இஸ்ரோ கடிதம்!

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ தேசிய முக்கியத்துவம் கருதி ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை மாநகராட்சிக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் இஸ்ரோ கடிதம் எழுதியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வருகிற 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் ஏவுகின்றனர். இதற்கு, எந்த இடையூறும் இல்லாத, தகவல் தொடர்பு சேவை மிக முக்கியமானது.

இஸ்ரோவின் அனைத்து முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளும், பிஎஸ்என்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆப்டிகல் பைபர் இணைப்புகளும், தேசிய நெடுஞ்சாலை வழியே செல்கிறது.

எனவே, 25ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரை சென்னை, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பொன்னேரி உட்பட, பிஎஸ்என்எல் இணைப்பு செல்லும் நெடுஞ்சாலைகளில் சாலை பராமரிப்பு பணி உட்பட பள்ளம் தோண்டுதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். தடையில்லாத சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ தேசிய முக்கியத்துவம் கருதி ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று இஸ்ரோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 25) முதல் 28ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனமும் கடிதம் அனுப்பியுள்ளது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 25 பிப் 2021