மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

பெட்ரோல் வாங்க கடன் கேட்டு மனு!

பெட்ரோல் வாங்க கடன் கேட்டு மனு!

பெட்ரோல், டீசல் வாங்க கடன் கேட்டு நூதன முறையில் வங்கியில் மனு அளித்துள்ளனர் தேனியைச் சேர்ந்த இளைஞர்கள்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐதாண்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெட்ரோல், டீசல் போடுவதற்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கும் கடன் வழங்குமாறு கனரா வங்கியில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மற்றொரு பக்கம் சிலிண்டரின் விலை இம்மாதம் மட்டும் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வியாழன் 25 பிப் 2021