மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

குரூப் 4 முறைகேடு ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க உத்தரவு!

குரூப் 4 முறைகேடு ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க உத்தரவு!

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கு ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குரூப் 1, குரூப்2ஏ, குரூப் 4, தேர்வுகளில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 40க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என சிபிசிஐடிக்கு நெருக்கடிகள் வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, முகமது ரஸ்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும். எனவே சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

-பிரியா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 25 பிப் 2021