மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

தேவையற்ற பயணங்களைக் குறைக்கவே கட்டண உயர்வு!

தேவையற்ற பயணங்களைக் குறைக்கவே கட்டண உயர்வு!

கொரோனா காலத்தில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பதற்குதான் சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ரயில்வே விளக்கமளித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 22ஆம் தேதி முதல் வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா தாக்கம் சற்று குறைவதைத் தொடர்ந்து நீண்ட தூர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது குறுகிய தூரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கட்டணம் அதிகமாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சகம், "கொரோனா காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்கவும், தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. ஏனெனில், இன்னும் கொரோனா தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில இடங்களில் மோசமான நிலையும் உள்ளது. பல மாநிலங்களில் கொரோனா சோதனைக்குப் பின்னரே மக்களை உள்ளே அனுமதிக்கின்றனர். தரப்படுத்தப்பட்ட முறையில் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை ரயில்வே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் ரயில்கள் இயக்கப்பட்டது போன்று முழுமையான சேவையை கொண்டு வருவதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 பிப் 2021