மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகள்!

கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகள்!

கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாகும். அதனால், அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவானதாக இருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதால் மீண்டும் தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், கோவிட் கேர் மையத்தில் தங்கவைக்கப்படுவர். மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். மேலும் ஏழு நாள்கள் அவர்களே காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், சுகாதாரப் பணியாளர்கள் அதனை மேற்பார்வை செய்ய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும்முன் கொரோனா சோதனையை 3 நாட்களுக்குள் எடுத்திருக்க வேண்டும்.

ஒரே தெருவில் 3 வீடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும். அந்த பகுதி 14 நாட்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வியாழன் 25 பிப் 2021