மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

பஸ் ஸ்டிரைக்: வெளி ஆட்கள் மூலம் பஸ் இயக்கம்!

பஸ் ஸ்டிரைக்: வெளி ஆட்கள் மூலம்  பஸ் இயக்கம்!

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(பிப்ரவரி 25) முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை தெரிந்து கொள்ள சிஐடியூ நிர்வாகி பாஸ்கரைத் தொடர்பு கொண்டோம். ”போலீசார்கள் வெளி ஆட்களை கொண்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அப்படி கூட்டி வந்த நபர் கடலூர் டிப்போவில் இருந்து பேருந்தை வெளியே எடுக்கும் போதே அங்கேயுள்ள சுவற்றில் இடித்துவிட்டார். பின்பு, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால், எதுவும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், இவர்களை நம்பி மக்கள் எப்படி பயணிக்க முடியும் . ஏற்கனவே அரசு பேருந்துகளின் நிலை பற்றி அந்தந்த டிரைவர்களுக்குதான் தெரியும். அவர்களுக்குதான் அந்த பக்குவம் இருக்கிறது.

புதிதாக, கார், லாரி ஓட்டுபவர்களை கொண்டு வந்து பேருந்தை ஓட்ட செய்தால், இந்த மாதிரியான அசாம்பாவிதங்கள்தான் நடக்கும் ”என்று கூறினார்.

வழக்கத்தை விட மிக குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பேருந்து நிலையங்களில் மக்கள் வெகு நேரமாக காத்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வெளியூர்களிலிருந்து வந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால், பல்வேறு இடங்களில் நடக்கும் திருமணத்துக்கு செல்ல வேண்டியவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். ஒருசில இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.

சென்னையில் 50%,மதுரையில் 15%, சேலத்தில் 60%, கோவையில் 40%, திருவாரூரில் 15%, திருச்சியில் 50%, கன்னியாகுமரியில் 60% , நாமக்கல் 90% , திருப்பூரில் 80% பேருந்துகளும், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அனைத்து பேருந்துகளும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. பணிமனை முன்பு போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 25% பேருந்துகளும், விருதுநகரில் 80 பேருந்துகளும், கரூரில் 85% பேருந்துகளும், பொள்ளாச்சியில் 20% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 25 பிப் 2021