மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

இந்த ஆண்டும் ஆல் பாஸ்: எந்தெந்த வகுப்புகளுக்கு?

இந்த ஆண்டும்  ஆல் பாஸ்: எந்தெந்த வகுப்புகளுக்கு?

தமிழகத்தில் 9 ,10, 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020 மார்ச் மத்தியிலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் நேரடி வகுப்புகள் அல்லாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 19ஆம் தேதி பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த வகுப்புகளைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9,10 ,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை குறைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மே 3ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்ட நிலையில் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது ஒருபுறமிருக்க இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்தது. அதுபோன்று 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த சூழலில் 2020- 21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

-பிரியா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 25 பிப் 2021