மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு!

ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 25 ஆயிரம் அரசு ஊழியர்களின் பணிக்காலம் மேலும் 1 ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தார்.

இதன்மூலம் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு ஓய்வூதிய பலன்கள் மிச்சமாகும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 25 பிப் 2021