மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

தீவிர சிகிச்சை பிரிவில் தா. பாண்டியன்

தீவிர சிகிச்சை பிரிவில் தா. பாண்டியன்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். தொடர்ந்து சிறுநீரக பிரச்சனைக்குச் சிகிச்சை எடுத்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலம் தேறிய நிலையில் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தா.பாண்டியன் உடல் நிலை குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தா பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர் தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருத்துவர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்துத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வியாழன் 25 பிப் 2021