மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

மூன்றாவது டெஸ்ட்: இந்தியா - மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள்!

மூன்றாவது டெஸ்ட்: இந்தியா - மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள்!

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 24) நடைபெற்ற முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான புதிதாக பெயர் சூட்டப்பட்ட நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. பகல் இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா பந்து வீசியது.

இந்திய அணியில் அக்சர் படேல், அஷ்வின் ஆகியோர் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் ஆறு விக்கெட்டுகளையும் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர் சுப்மன் கில் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இந்த நிலையில் அடுத்து வந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேசப் போட்டிகளில் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலியும் இணைந்து முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 41 சதங்கள் அடித்துள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலி புதிய சாதனை படைப்பார்; சர்வதேசப் போட்டியில் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 ரன்களில் வெளியேறினார். அதன்பின் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

பகல் - இரவு ஆட்டத்துக்கான பிங்க் பால் நேற்றைய ஆட்டத்தில் அதிகமாக பவுன்ஸ் ஆனதால் நிறைய விக்கெட்டுகள் சரிந்தன. நேற்று (பிப்ரவரி 24) முதல் நாளே பிட்ச் அப்படி இருந்ததால் இன்று (பிப்ரவரி 25) இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்யும்போது வேகமாக விக்கெட்டுகள் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 பிப் 2021