மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

திருவண்ணாமலை: நாளை (பிப்ரவரி 26) கிரிவலத்துக்கு வர வேண்டாம்!

திருவண்ணாமலை: நாளை (பிப்ரவரி 26) கிரிவலத்துக்கு வர வேண்டாம்!

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலையில் நாளை (பிப்ரவரி 26) பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள உள்ள மலைப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனால் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினரும் பக்தர்களின் வருகையால் வருமானம் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பெளர்ணமியில் இருந்து கிரிவலத்துக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் இந்த பெளர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்

ஆனால், மீண்டும் கொரோனா பரவி வருவதால் அதைத் தடுக்கும் வகையில், “திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ஆம் தேதி மாலை 3.49 மணி முதல் 27ஆம் தேதி மாலை 02.42 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம்” என பொதுமக்கள், பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

11ஆவது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பெளர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 25 பிப் 2021