மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: கிராமத்து கொத்துக்கறி குழம்பு

கிச்சன் கீர்த்தனா: கிராமத்து கொத்துக்கறி குழம்பு

உணவு வகைகளில் பலவித மாடர்ன் அயிட்டங்கள் வந்துவிட்டாலும், "எங்க அம்மா மட்டன் கொழம்பு வச்சா... ஊரே மணக்கும். அதுதான் கிராமத்து மணம்'' என்பவர்கள் இன்றைக்கும் உண்டு. அத்தகையோருக்கு பாட்டி மற்றும் அம்மாவின் கைப்பக்குவத்தை மனதில் மணக்க வைப்பதற்கு உதவும் இந்தக் கிராமத்து கொத்துக்கறி குழம்பு.

என்ன தேவை?

கொத்துக்கறி - 250 கிராம்

தேங்காய் - அரை மூடி தக்காளி - 2

சின்னவெங்காயம் - 10

கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

புதினா இலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 2 இன்ச் துண்டு

பூண்டு - 3

காய்ந்த மிளகாய் - 10

மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன்

கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

பட்டை - ஒன்று

சீரகம் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை - அரை மூடி

உப்பு - தேவையான அளவு

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கொத்துக்கறியை தண்ணீரில் அலசி வைக்கவும். தேங்காயைத் துருவி 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும். இஞ்சி-பூண்டை நன்றாகத் தட்டி வைத்துக்கொள்ளவும் (வேண்டுமானால் விழுதாக அரைத்துக்கொள்ளலாம்)

மசாலா தயாரிக்க, அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), பொட்டுக்கடலை, சீரகம், காய்ந்த மிளகாய், கசகசா அனைத்தையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்கு வாசனை வரும்வரை வதக்கவும் (கருகிவிட்டால் சுவை, மணம் இல்லாமல் போய்விடும் கவனம்). அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். இந்த விழுதை, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலில் கலந்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தட்டிய இஞ்சி-பூண்டு (அல்லது பேஸ்ட்) சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா இலைகளைச் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, கழுவி வைத்துள்ள கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வதக்கவும்.

கறிக் கலவையில் தேங்காய்ப்பால்-விழுதுக் கலவையைச் சேர்த்துக் கிளறிவிட்டு குக்கரை மூடி 10 - 12 நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கிவிட்டுப் பரிமாறவும்.

குறிப்பு

பொட்டுக்கடலை குழம்பின் சுவையைக் கூட்டும்; குழம்பின் அடர்த்தியையும் அதிகரித்துக் கொடுக்கும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 25 பிப் 2021