மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்வு!

நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்வு!

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளான எம்எஸ், எம்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. இந்த நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியுள்ளது.

அதன்படி, பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் ரூ.3,750இல் இருந்து, தற்போது ரூ.5,015ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு இந்தியா முழுவதும் 16 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை போல் நீட் தேர்வுக்கும் மாணவர்கள் அதிக வாய்ப்பு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு முதல் நீட் தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

புதன் 24 பிப் 2021