மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

டூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஜாமீன்!

டூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஜாமீன்!

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு நேற்று (பிப்ரவரி 23) டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு உள்நாட்டில் மட்டுமில்லாது, வெளிநாட்டுப் பிரபலங்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற தகவல் அடங்கிய ஆவணத்தை(டூல்கிட்) பகிர்ந்ததுதான் காரணம் என்று குற்றம்சாட்டி அவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி திஷா ரவி கைது செய்யப்பட்டு, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதேசமயம், திஷா ரவி தரப்பில் டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று கேள்வி எழுப்பியது.

திஷா ரவி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், திஷா ரவிக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார்.

இந்த மனுவை நீதிபதி தர்மேந்திரா ரானா, ”ஆதாரங்களை வைத்து பார்க்கையில், எந்த குற்றப் பின்னணியும் இல்லாத 22 வயதான இளம் பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பதற்கு எந்த காரணமில்லை” என்று கூறி திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கினார்.

சிறை நடவடிக்கைகளுக்குப் பிறகு, திஷா ரவி விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திஷா ரவியின் தாயார் மஞ்சுளா கூறுகையில், ”இந்த மாதிரியான சம்பவம் யாருக்குமே கடினமாகத்தான் இருக்கும், ஆனால், நம் குழந்தைகள் தவறு செய்யாதபோது, நாம் ஏன் பயப்பட வேண்டும்?. நம் குழந்தைகள் நீதிக்காகவும், சத்தியத்திற்காகவும் போராடும்போது, நாம் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என கூறினார். மகள் திரும்பி வருவதில் மகிழ்ச்சி என்றும், நாட்டின் சட்ட அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும்” கூறினார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 பிப் 2021