மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

பாலியல் தொல்லை: காத்திருப்போர் பட்டியலுக்கு ஸ்பெஷல் டிஜிபி மாற்றம்!

பாலியல் தொல்லை: காத்திருப்போர் பட்டியலுக்கு ஸ்பெஷல் டிஜிபி மாற்றம்!

பாலியல் புகாரில் சிக்கிய ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதல்வர் பாதுகாப்புப் பணியிலிருந்து திரும்பும் வழியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன்னையும் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி ஒருவர் டிஜிபி திரிபாதியிடமும், உள்துறை செயலாளரிடமும் புகார் மனு கொடுத்திருந்தார்.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் செயலுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது. அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி டாக்டர் கே. ஜெயந்த் முரளி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

-பிரியா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 24 பிப் 2021