மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலைத் தர இயலாது: தேர்தல் ஆணையம்!

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலைத் தர இயலாது: தேர்தல் ஆணையம்!

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலைத் தர இயலாது என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பாவிட்டால் தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 80 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இதற்குப் பதில் அளித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுகள் தனியாக திரட்டப்படுகிறது. எல்லோருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதியின் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பேரில் படிவங்கள் வழங்கப்படும். தேவைப்பட்டால் தபால் ஓட்டு படிவங்களைச் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், “அவர்களது பெயர் விவரப் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமைக்கு மாறானது. சிலர் நேரில் சென்றுகூட வாக்களிக்க விரும்பலாம். எனவே அரசியல் கட்சிகளுக்கு இப்போது 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலைத் தர இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 24 பிப் 2021