மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

பள்ளி மாணவர்களுக்கு விரைந்து பாடங்களை முடிக்க உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு விரைந்து பாடங்களை முடிக்க உத்தரவு!

சட்டபேரவை முடிவடைந்ததும் பத்தாம், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோன்று, அடுத்தாண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களான 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதுகுறித்து பள்ளி கல்வித் துறை செயலாளர் கூறுகையில், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் நோக்கில் பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்படுகிறது. அந்த பாடங்களை மட்டும் மாணவர்கள் படித்தாலே போதுமானது. தற்போதுவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சட்டபேரவை முடிவடைந்ததும், 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு வருகிற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி, மே 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும், தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும் என்று கடந்த 17 ஆம் தேதியன்று அரசு தேர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 பிப் 2021