மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

யுபிஎஸ்சி: மறுவாய்ப்பு கிடையாது!

யுபிஎஸ்சி: மறுவாய்ப்பு கிடையாது!

கொரோனா தொற்று காரணமாக யுபிஎஸ்சி தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ்,மற்றும் ஐஆர்எஸ் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபரில் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் தேர்வை எழுத முடியவில்லை. மேலும் வயது வரம்பின் அடிப்படையில் கடைசி முறையாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களும் தேர்வை தவறவிட்டனர். கடைசியாக தேர்வு எழுத வேண்டிய வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 24) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 24 பிப் 2021