மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

கண்ணாடி அணிவோருக்கு 2-3 மடங்கு கொரோனா சான்ஸ் குறைவு!

கண்ணாடி அணிவோருக்கு 2-3 மடங்கு கொரோனா சான்ஸ் குறைவு!

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை வந்துவிட்டதா என உலக நாடுகள் அச்சமடைந்துள்ள நிலையில், இதில் நல்ல செய்தி ஒன்றும் கிடைத்துள்ளது.

கண்ணாடி அணியாமல் இருப்பவர்களைவிட, கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு 2- 3 மடங்கு குறைவாகவே கொரோனா தொற்றுகிறது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வட இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்து பிரிட்டனின் மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக, ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 23 முறை நாம் முகத்தில் கைவைக்கிறோம்; மணிக்கு மூன்று முறையாவது கண்ணில் நம் கை படுகிறது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

கொரோனாவைப் பொறுத்தவரை, முகம், மூக்கு, வாய், கண்கள் வழியாகவே பரவுகிறது. முகக்கவசம் அணிவதால் மூக்கையும் வாயையும் தொடுவது கணிசமாகக் குறைகிறது. ஆனால் இதனால் கண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

இந்த ஆய்வைச் செய்திருக்கும் அமித் குமார் சக்சேனா, அசுத்தமான கை மூலம் கண்களைத் தொடுவதும் தேய்ப்பதும் கிருமி தொற்றுவதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது. இதில் கண்ணாடி அணிவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது என்கிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் உள்ள கேவி கோவிட் மருத்துவமனையில் குறிப்பிட்ட காலத்தில் அனுமதிக்கப்பட்ட 317 நோயாளிகள் முதலில் கணக்கில் எடுக்கப்பட்டனர். பிறகு, அவர்களில் 304 பேர் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களில் 223 பேர் ஆண்கள், 81 பேர் பெண்கள்.

ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அனைவருமே பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள். எல்லாருக்குமே ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சற்று அதிகமான, தீவிர பாதிப்பு கொண்டவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. பத்து வயதுக்குக் குறைவானவர்களும் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டனர்.

மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தினரின் ஆலோசனையும் இதில் பெற்றுக்கொள்ளப்பட்டது.

68 பேருக்கு பார்வைக் குறைபாடு இருப்பதும் அவர்களில் 58 பேர் நாள் முழுவதும் கண்ணாடி அணிவதும் உறுதிசெய்யப்பட்டது. அதாவது மொத்தமுள்ள 304 பேரில் 19 சதவீதம்.

கொரோனா பாதிக்கப்படாத மக்கள்தொகையினரில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை, கொரோனா தொற்றியவர்களில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை, பாதிப்பின் அளவு, சதவீதம் ஆகிய கணக்கீடுகளின் அடிப்படையில், ஆய்வு முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி, கண்ணாடி அணிபவர்களில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புள்ளவர்களின் வீதம் 0.48 ஆகவும் கண்ணாடி அணியாதவர்களில் தொற்றுக்கான வாய்ப்புள்ளவர்களின் வீதம் 1.35 ஆகவும் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அதாவது, நாள் முழுவதும் கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு, கண்ணாடி அணியாத மற்றவர்களைவிட கொரோனா தொற்றக்கூடிய வாய்ப்பு 2- 3 மடங்கு குறைவாக இருக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாகும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 பிப் 2021