மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்!

கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்!

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் இருக்கின்ற வேளையில், இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குமுன் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றுடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வுசெய்தார். மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை கட்டணம் செலுத்த வசதியாக பணப்பரிமாற்றம் மையம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதுபோன்று, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து தலைநகர் டெல்லிக்கு வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர கடைபிடிக்காவிட்டால், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை தமிழகத்திற்கு நேரிட வாய்ப்பு உள்ளது என்றும், ஹைதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 24 பிப் 2021