மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: மட்டன் மிளகுக் கறி

கிச்சன் கீர்த்தனா: மட்டன் மிளகுக் கறி

“பொதுவாகவே அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகள் எளிதாக ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்” என்பார்கள். அதற்கு இடம் தராமல் உதவும், எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த மட்டன் மிளகுக் கறி.

என்ன தேவை?

மட்டன் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கியது)

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (நீளமாகக் கீறியது)

எலுமிச்சைச் சாறு - ஒரு சிட்டிகை

தேங்காய் - அரை மூடி

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

ஏலக்காய் - ஒன்று

கிராம்பு - ஒன்று

பட்டை - ஒரு சிறிய துண்டு

கசகசா - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 5 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

நறுக்கிய மட்டன் துண்டுகளை நன்கு கழுவவும். தேங்காயைத் துருவிக் கொண்டு, பாதியை மசாலாவுக்கு வைத்துவிட்டு, மீதியில் தேங்காய்ப்பால் எடுக்கவும். தேவையெனில், அரை கப் வெதுப்வெதுப்பான நீரை அதனுடன் கலந்துகொள்ளலாம்.

தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, கசகசா அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி பேஸ்ட் ஆக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை நன்கு வதக்கவும்.

மட்டன் துண்டுகள், உருளைக்கிழங்கை வதக்கிய கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த தேங்காய் மசாலாவையும் சேர்த்துக் கலந்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் (இரண்டு கப்) சேர்க்கவும்.

குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 25 நிமிடங்கள் கலவையை வேகவிடவும். பிறகு குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி பிரஷர் அடங்கிய பிறகு மூடியைத் திறந்து கறி வெந்திருப்பதை உறுதி செய்யவும் (வேகவில்லை என்றால் மிதமான தீயில் மீண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்).

மட்டன் கலவையில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து (மூடி போடத் தேவையில்லை), கிரேவி பதத்துக்கு வந்து எண்ணெய் பிரிந்ததும் சிறுதீயில் வைத்து, எலுமிச்சைச் சாறு ஊற்றி கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 பிப் 2021