மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

நெருங்கும் தேர்தல்.... : போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்!

நெருங்கும் தேர்தல்.... : போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்!

ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்தும், பணி நிரந்தரம், அகவிலைப்படி உயர்வு, பணிசுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த மாதம் குரோம்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டவில்லை.

இதையடுத்து, வரும் 25 ஆம் தேதி(வியாழன்) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தொமுச, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தேர்தலுக்கு முன்பாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சமீபத்தில் அரசு ஊழியர்களும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் இம்மாதிரியான போராட்டங்களை அரசு எவ்வாறு கையாள போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

செவ்வாய் 23 பிப் 2021