மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தின் நிலை?

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தின் நிலை?

தமிழகத்தில் கொரோனா பரவல் மோசமாக இருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து வந்தது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக 449 பேர் உட்பட மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய சூழல் அச்சம் தரும் வகையில் இருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவலாகக் 450க்கும் குறையாமல் உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொற்று அதிக அளவு பரவுவதைக் காணமுடிகிறது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.48 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தாலும் தற்போதைய நிலை அச்சம் தரும் வகையில் உள்ளது.

மேலும் மக்கள் முக கவசம், அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்தி விடுவதாக அதிருப்தி தெரிவித்த அவர், இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இல்லை என்றாம் மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 23 பிப் 2021