ரிலாக்ஸ் டைம்: தேங்காய் லட்டு!


ரிலாக்ஸ் டைமில் ஏதாவது சாப்பிட நினைப்பவர்களுக்கு உதவும் இந்த தேங்காய் லட்டு, மனத்துக்குப் புத்துணர்ச்சித் தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி ஐந்து, உலர் திராட்சை ஐந்து போட்டு பொன்னிறம் வந்தவுடன் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகியதும் ஒரு கப் தேங்காய்த்துருவல், பொடித்த ஏலக்காய் மூன்று சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தட்டில் எடுத்துவைத்து, மிதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
சிறப்பு