மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 பிப் 2021

பட்டியல் கேட்கும் டிஐஜி: அலர்ட் ஆன அதிகாரிகள்!

பட்டியல் கேட்கும் டிஐஜி: அலர்ட் ஆன அதிகாரிகள்!

விழுப்புரம் சரகத்திற்குப் பொறுப்பேற்றுள்ள புதிய டிஐஜி, சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பிளாக் ஸ்பாட் மற்றும் குற்றப் பின்னணி உள்ள முக்கிய நபர்களின் விபரங்களைச் சேகரித்து வருகிறார்.

வடசென்னை போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றிய எம்.பாண்டியன் ஐபிஎஸ், விழுப்புரம் சரகம் டிஐஜியாக பிப்ரவரி 19ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

சில மணி நேரங்களில் மூன்று மாவட்டங்களில் உள்ள பிளாக் ஸ்பாட், (குற்றம் நடக்கும் பகுதிகள்) சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையாளர்கள், மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள், ரவுடிகள், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபடுபவர்களின் பட்டியல்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளார்.

இந்த மாதம் விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் மற்றும் அமித் ஷா விசிட் இருப்பதால் அதற்கான பாதுகாப்பு பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும்... தேர்தல் அமைதியாக நடைபெற சமூக விரோதத் தொழிலில் ஈடுபடுபவர்களையும், ரவுடிகளையும் கட்டுப்படுத்த ஆயத்தமாகி வருவதாகச் சொல்கிறார்கள் டிஎஸ்பிக்கள்.

டிஐஜி பாண்டியன், நேரடியாக டிஎஸ்பியாக தேர்வாகி முதன் முதலில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்ட அதிகாரியாக பணியாற்றினார். 1999 டிசம்பர் 2ஆம் தேதி, பதவியேற்க அரசு பேருந்தில் வந்தவர், தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் சாதாரண விடுதியில் தங்கி அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்றார்.

பண்ருட்டியில் பதவியிலிருந்த 53 நாட்களில் முக்கிய ரவுடிகளையும் கள்ளச்சாராயம், கஞ்சா வியாபாரிகளையும் நசுக்கிவிட்டு சென்றார். அதன் பிறகுத் தென் மாவட்டங்களில் பணி செய்தவர், எஸ்.பி.சி.ஐடி,யில் (உளவுத்துறையில்) ஏடிஎஸ்பி, எஸ்.எஸ்.பி, மற்றும் முஸ்லிம் தீவிரவாத கண்காணிப்பு பிரிவு எஸ்.பி என நீண்ட நாட்கள் உளவுத்துறையில் இருந்தவர்.

இப்படிப்பட்டவர் விழுப்புரம் சரகத்துக்கே டிஐஜியாக வந்திருப்பதை அறிந்த நேர்மையான அதிகாரிகள் மகிழ்கிறார்கள். சில அதிகாரிகள் எச்சரிக்கையுணர்வோடு பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 22 பிப் 2021