மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

வாணி போஜனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

வாணி போஜனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

சின்னத்திரையிலிருந்து வந்த நடிகைகள் என்றாலே சினிமாவில் கொஞ்சம் தள்ளிவைத்தே பார்ப்பார்கள். மற்ற மாநிலங்களிலிருந்து நடிகைகளை இறக்குமதி செய்யும் இயக்குநர்கள், நம்ம ஊர் நடிகைகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், அந்த டிரெண்ட் இப்போது மாறிவருவதாகவே தெரிகிறது. ஏனெனில், தமிழில் அதிக படங்களை நடிக்கும் நடிகை சின்னத் திரையிலிருந்து வந்த பிரியா பவானி ஷங்கர் தான். இவரைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜனுக்கும் அடுக்கடுக்காகப் படங்கள் தேடிவருகிறதாம்.

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘சியான் 60’. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவிலேயே தொடங்க இருக்கிறது. புது அப்டேட் என்னவென்றால், படத்தில் விக்ரமுக்கு நாயகியாக நடிகை வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது, விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் தயாராகி வருகிறது. இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்தவுடன் ‘சியான் 60’ படத்தைத் தொடங்க இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். விக்ரமுக்காக மட்டுமே படக்குழு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ‘மீக்கு மாத்தரமே செப்பதா’ படத்தில் நடித்ததன் மூலம் பெரியளவு கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு, தமிழில் ‘ஓ மை கடவுளே’ நல்ல ரெஸ்பான்ஸ் தந்தது குறிப்பிடத்தக்கது. லாக் அப், பகைவனுக்கு அருள்வாய் மற்றும் வெப் சீரிஸான ‘ட்ரிபிள்ஸ்’ என அடுத்தடுத்து படங்களை நடித்தும் விட்டார். இந்த நிலையில்தான், விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விக்ரம் படம் ஒப்பந்தமாவதற்கு முன்புவரை, வாணி போஜனின் சம்பளம் 20 லட்சம் + ஜி.எஸ்.டி. இனி, இந்த சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழலாம்.

இந்தப் படம் மட்டுமின்றி, நிறைய படங்களில் நடிக்க அடுக்கடுக்காக வாய்ப்புகள் வாணி போஜனுக்கு குவிந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. வாய்ப்பு வருகிறதென வந்த படங்களில் எல்லாம் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 21 பிப் 2021