மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

அதிகரிக்கும் கொரோனா: ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரிக்க அறிவுறுத்தல்!

அதிகரிக்கும் கொரோனா: ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரிக்க அறிவுறுத்தல்!

சமீப நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்த எண்ணிக்கை இன்று 1,45,634 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.32 சதவீதம் ஆகும். சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. துரித பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டவர்களுக்கும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரைப் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், முன்பைப்போல் பரவுவதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து ஒரு சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்கவுள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 21 பிப் 2021